கடவுள் பெயரில் ஆக்கிரமிப்பு நோட்டீஸ் வழங்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
ராஞ்சியின் தன்பாத் ரயில் நிலையத்தில் உதவி பொறியாளராக பணி புரிந்து வந்தவர் ஆனந்த் குமார் பாண்டே. இவர் ரயில்வே ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அதே பகுதியில் அமைந்துள்ள அனுமன் கோவிலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸில் 10 நாட்களுக்குள் கோவிலை அகற்றாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது எல்லாம் எப்போதும் அதிகாரிகள் எடுக்கும் சாதாரண நடவடிக்கை என்றாலும், நோட்டீஸ் கோவில் வாசலில் ஒட்டப்பட்டிருந்ததும், அதில் நில அபகரிப்பாளர் என்று அனுமன் பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் கடவுள் பாவம் சும்மா விடுமா என்பது போல அவர் அங்கிருந்து உடனடியாக ஆனந்த் குமார் பாண்டே பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் கூறியதாவது. அவர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டு இருப்பது வழக்கமான நடவடிக்கை தான். ஆனால் கோவில் வாசலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதும், கடவுளையே நில அபகரிப்பாளராக குறிப்பிட்டதும் மிகப்பெரிய தவறு. அதை நாங்கள் அனைவரும் ஒப்புக் கொண்டுள்ளோம் என கூறியுள்ளது. அதேபோல் கோவிலுடன் சேர்ந்த சுமார் 27 குடியிருப்புகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து அப்பகுதி மக்கள் உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த ரயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நோட்டீசை அகற்றினர். மேலும் இது மனித தவறுதான் மக்களின் நம்பிக்கையில் இடையூறு செய்யும் எந்த எண்ணமும் எங்களுக்கு இல்லை. அபகரிப்பு செய்த நிலங்களை மீட்கவே ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது என பொதுமக்களை சமாதானப்படுத்தியுள்ளனர்.