8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த யோகா ஆசிரியருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ஜேம்ஸ் மரிய ஞானராஜ் என்பவர் யோகா ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு ஜேம்ஸ் மரிய ஞானராஜ் அதே பள்ளியில் படித்து வந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் கூறியுள்ளார். இதனையறிந்து அதிர்ச்சி அடைந்த தாயார் இதுகுறித்து அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஜேம்ஸ் மரிய ஞானராஜை கைது செய்துள்ளனர். அதன்பின் ஜேம்ஸ் மரிய ஞானராஜ் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.இராஜலட்சுமி ஜேம்ஸ் மரிய ஞானராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.