இலங்கை நாட்டில் கடந்து சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் அந்நாட்டில் உள்ள ஆறு மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டு வருகின்றது. இந்த பலத்த மழை வெள்ளத்தால் சுமார் 50,000 மேற்பட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இலங்கையில் கனமழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்கள் வருகின்ற 19ஆம் தேதி வரையில் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வெள்ளத்தால் சூழப்பட்டுள்ள பகுதியில் உள்ள மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.