பட்டப்பகலில் ஸ்கூட்டரில் விவசாய வைத்திருந்த 1 லட்சத்து 35 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் அருகே இருக்கும் கரட்டுப்பாளையம் பகுதியில் சேர்ந்த ராமலிங்கம் என்ற விவசாயி நேற்று முன்தினம் காலை 11 மணிக்கு கரட்டுப்பாளையத்தில் இருந்து ஸ்கூட்டரில் வெள்ளகோவிலில் இருக்கும் ஒரு வங்கிக்கு வந்தார். பின் வங்கியிலிருந்து ஒரு லட்சம் எடுத்து அதை ஒரு பையில் வைத்துக் கொண்டு வெளியே வந்தார். இதன்பின் அந்தப் பணப்பையை ஸ்கூட்டர் இருக்கையில் இருக்கும் பெட்டியில் வைத்து பூட்டினார். பின்னர் அங்கிருந்து வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வந்து ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று விட்டு வெளியே வந்தார்.
அப்போது சாவியை போட்டு இருக்கின்றார். ஆனால் சாவி உள்ளே செல்லாததால் சந்தேகம் அடைந்த அவர் சீட்டின் அடியில் இருந்த பணப்பை இருக்கின்றதா என பார்த்தபோது பையை காணவில்லை. அந்தப் பையில் வங்கியில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு லட்சம் அதற்கு முன் வைத்திருந்த 35 ஆயிரம் என ஒரு லட்சத்து 35 ஆயிரம் மற்றும் வங்கி காசோலை, வங்கி புத்தகம், ஆதார் அட்டை, காப்பீடு அட்டை உள்ளிட்டவை இருந்துள்ளது. இதனை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளார்கள். இதை அடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தார்கள். அதில் மர்ம நபர்களின் உருவம் சரியாக தெரியாததால் வேறு இடத்தில் ஏதாவது கண்காணித்து கேமரா இருக்கின்றதா? என ஆய்வு செய்து வருகின்றார்கள்.