Categories
சினிமா தமிழ் சினிமா

அடக்கடவுளே! “தமிழின் டாப் 5 படங்கள்” லிஸ்டில் இடம் பிடிக்காத தலைவர்….‌ அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் சமீபத்தில் வெளியான முன்னணி ஹீரோக்களின் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியது. அந்த வகையில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் 450 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்து தமிழ் சினிமாவிற்கு தனி பெருமை சேர்த்துள்ளது. அதன் பிறகு நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படமும் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று 400 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தை மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற ஹிட் படங்களை கொடுத்திருந்த லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார்.

இதனையடுத்து நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் மற்றும் டான்  திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. இதைத்தொடர்ந்து நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் என்னதான் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் சாதனை படைமாகவே அமைந்தது. இதேபோன்று தல அஜித்தின் வலிமை திரைப்படமும் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தியது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் வசூல் வேட்டை நடத்திய டாப் 5 படங்கள் குறித்த லிஸ்ட் வெளியாகியுள்ளது.

அதன்படி பொன்னியின் செல்வன் படம் முதல் இடத்திலும், 2-வது இடத்தில் உலகநாயகனின் விக்ரம் படமும், 3-வது இடத்தில் பாகுபலி 2 படமும், 4-வது இடத்தில் தளபதி விஜயின் பிகில் படமும், 5-வது இடத்தில் தல அஜித்தின் விசுவாசம் திரைப்படமும் இடம்பெற்றுள்ளது‌. ஆனால் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்தின் ஒரு படம் கூட லிஸ்டில் இடம் பிடிக்கவில்லை என்பது தான் தற்போது மிகப்பெரிய வியப்பாக இருக்கிறது. இது ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் சங்கர் கூட்டணியில் உருவான எந்திரன் 2.0 படத்திற்கு பிறகு ரஜினியின் படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். ‌

Categories

Tech |