இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த ஆதார் அட்டையானது தடுப்பூசி போட்டுக் கொள்வது முதல் வங்கியில் கணக்கு தொடங்குவது முதல் அனைத்து விதமான பயன்பாடுகளுக்கும் முதல் தேவையாக இருக்கிறது. இந்நிலையில் ஆதார் அட்டையை ஒருவர் வாங்கி பல வருடங்கள் ஆகியிருந்தால் அதை புதுப்பித்துக் கொள்வது மிகவும் நல்லது. இதனையடுத்து சிலரது ஆதார் அட்டையில் நிறைய செல் போன் நம்பர்கள் இருக்கிறது. அதாவது காலங்கள் செல்ல செல்ல சிலர் தங்களுடைய செல்போன் நபர்களை மாற்றிக் கொண்டே செல்வார்கள்.
இதன் காரணமாக ஆதார் அட்டையில் இருக்கும் செல்போன் நம்பர் பயன்படுத்தாமல் இருப்பதோடு நிறைய நபர்களும் அதில் பதிவாகி இருப்பதற்கான சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது. எனவே தற்போது ஆதார் அட்டையில் ஏராளமான செல் போன் நம்பர்கள் பதிவாகி இருக்கிறதா என்பதை எப்படி தெரிந்து கொள்ளலாம் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். அதற்கு முதலில் நீங்கள் https://tafcop.dgtelecom.gov.in/ என்ற இணையதள முகவரிக்குள் சென்று ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்போன் நம்பரை பதிவு செய்தால், ஒரு ஓடிபி நம்பர் வரும்.
அந்த ஓடிபி நம்பரை பதிவேற்றம் செய்த பிறகு ஆதார் அட்டை என்னுடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்போன் நம்பர்களின் பட்டியல் திரையில் காட்டும். அதில் நீங்கள் பயன்படுத்தாத செல்போன் நம்பர்கள் இருந்தால் அதை உடனடியாக நீக்கி விடுங்கள். அதற்கான ஆப்ஷனும் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் தேவையில்லாத செல்போன் நபர்களை நீக்கி விட்டு உங்களுடைய ஆதார் அட்டையை நீங்களே பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.