திருப்பூர் அருகே வங்கியில் வைத்திருந்த 50 பவுன் நகை கொள்ளை போனதை அறிந்த விவசாயி கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பாரத ஸ்டேட் வங்கியின் பெட்டகத்தை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை அடித்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் அதில் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த 50 பவுன் நகையை பறிகொடுத்த விவசாயி கண்ணீர் மல்க வேதனையுடன் பேட்டி அளித்துள்ளார். அதில்,
விவசாய தொழிலில் பொருத்தவரையில் கடின உழைப்பு போட்டால்தான் வருமானம் வரும். அந்த வருமானத்தை செலவு செய்யாமல் சிறுக சிறுக சேர்த்து 50 பவுன் நகை எனது மகளின் திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்தேன். அதை வீட்டில் வைத்தால் பாதுகாப்பாக இருக்காது என்று கருதித்தான் வங்கி பெட்டகத்தில் வைத்தோம்.
ஆனால் அங்கேயும் கொள்ளையர்கள் புகுந்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் மிகுந்த வேதனையளிக்கிறது என்று கதறி அழுதார். மேலும் ஏற்கனவே இதே வங்கியில் கொள்ளை சம்பவம் நடந்திருக்கிறது. அப்போதே வங்கி அதிகாரிகள் உரிய பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு இருந்தால் நகை எங்கள் நகை தப்பி இருக்குமே என்று கூறி விவசாயி அழுதது அப்பகுதியில் உள்ள மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.