Categories
தேசிய செய்திகள்

ரெடியா!!…. தனது காதலியை 1 வருடத்தில் தேடி புடிப்பான காதலன்…. மாஸ் காட்டிய மும்பை ஐகோர்ட்….!!!!

தன்னால் பாதிக்கப்பட்ட பெண்ணை தேடி கண்டுபிடித்து ஒரு வருடத்திற்குள்  திருமணம் செய்ய வேண்டுமென மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மும்பையில் உள்ள ஒரு பகுதியில் 26 வயதுடைய ஒரு வாலிபர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசித்து வந்த 22 வயதுடைய இளம் பெண்ணும் கடந்த 2018-ஆம் ஆண்டு காதலித்து வந்தனர். இதனையடுத்து 2019ஆம் ஆண்டு அந்த இளம் பெண் கர்ப்பம் அடைந்துள்ளார். இது குறித்து அந்தப் பெண் தனது காதலனிடம் கூறியுள்ளார். ஆனால் அந்த வாலிபர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையில் கடந்து 2020-ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  27-ஆம் தேதி அந்த பெண்ணிற்கு குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அந்த பெண் ஜனவரி 30-ஆம் தேதி தனது குழந்தையை ஒரு மருத்துவமனை அருகே வைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளார். மேலும் தனது காதலன் மேல்  அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு  நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கூறியதாவது. குற்றவாளியுடன் பாதிக்கப்பட்ட இளம்பெண்  கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் உறவிலிருந்து உள்ளார். அது அந்த பெண்ணின் குடும்பத்திற்கும் தெரியும், அவர்களும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என இளம்பெண்ணின் புகாரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளியுடன் விருப்பப்பட்டே  உடல் ரீதியில் உறவில் இருந்துள்ளார். ஆனால் அந்த பெண்  கர்ப்பம் அடைந்ததை அறிந்த பின் குற்றவாளி அவரை கைவிட்டு விட்டு விலக முயன்றுள்ளார். இதனால் அந்த பெண் குற்றவாளி மீது பாலில் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளார், மேலும்  அந்த பெண் தான் பெற்ற குழந்தையையும் கைவிட்டு விட்டு மாயமாகியுள்ளார். தற்போது அந்த குழந்தை தத்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குற்றவாளி பாதிக்கப்பட்ட பெண்ணை 1  ஆண்டுக்குள் தேடி கண்டுபிடித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும், 25 ஆயிரம் ரூபாய் பிணையில் நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |