Categories
மாநில செய்திகள்

அதிகரிக்கும் மோசடி!…. மக்களே யாரும் இதை நம்பாதீங்க…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

அண்மை காலமாக ஆன்லைன் வாயிலாக பல்வேறு வகை மோசடிகள் நடந்து வருகிறது. இந்த மோசடியில் சிக்கி பலர் தவித்து வருகின்றனர். மொபைல் எண்ணிற்கு தொடர்புகொண்டு ஓடிபி கேட்பது, ஆன்லைன் லோன்ஆப் மோசடி வரிசையில் பாஸ் ஸ்கேம் என புது ஏமாற்று வேலை நடந்து வருகிறது. இதில் ஈடுபடும் கும்பல் உங்களது அலுவலகத்தில் உயர்பதவிகளில் உள்ள அதிகாரிகள், மேனேஜர்கள் போல போலியாக சமூகவலைதளங்களில் கணக்கு தொடங்குவார்கள்.

உங்களது இன்பாக்ஸில் வந்து, என் கார்ட் ப்ளாக்காகிவிட்டது, அக்கவுண்ட் ப்ளாக்காகிவிட்டது என எதாவது சொல்லி பணம் கேட்பார்கள். இதற்கிடையில் அது உங்கள் பாஸ் அல்ல. இதுபோன்று உங்களை யாராவது தொடர்புகொண்டால், முதலில் பணம் கேட்பது, உங்கள் பாஸ் தானா? என உறுதி செய்யவேண்டும். உங்களது பாஸிற்கு தொடர்புகொண்டு அதனை உறுதிசெய்து விட்டு பணம் அனுப்புங்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு ஏற்கனவே விழிப்புணர்வு பதிவை வெளியிட்டிருந்தார். அத்துடன் இதுபோன்ற மோசடிகளுக்கு பலியாக வேண்டாம் என்று காவல்துறையும் எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு காவல்துறையின் அதிகாரப்பூர்வமான பக்கத்திலிருந்து மீம்ஸ் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் ஒரு பதிவு வெளியிடப்பட்டு இருக்கிறது. இவ்வாறு மீம்ஸ் வாயிலாக பல பேருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தக்கூடிய பதிவை வலைதளத்தில் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |