தீபாவளி பண்டிகை வரும் 24-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கின்றது. தீபாவளி அன்று அனைவரும் எண்ணெய் தேய்த்து தலைக்கு குளித்து புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகள் வெடித்து கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகையாகும்.
தீபாவளி பண்டிகை அன்று விளக்கேற்றும் போது கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள்:
- தீபாவளி பண்டிகை அன்று முதலில் வீட்டின் பூஜை அறையில் விளக்கு ஏற்ற வேண்டும்.
- பெருமாளுக்கு உகந்த துளசி செடி உள்ள இடத்தின் மாடத்தில் விளக்கு ஏற்றலாம்.
- செல்வ வளம் கிடைப்பதற்காக வடகிழக்கு நோக்கி விளக்கு ஏற்றலாம்.
- குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்காக கிழக்கு நோக்கியும் விளக்கு ஏற்றலாம்.
- வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்கள், நலம், வளத்தை அதிகரிப்பதற்காக வீட்டின் தண்ணீர்தொட்டி அருகில் விளக்கு ஏற்றலாம்.
- வீடு முழுவதும் விளக்குகளை ஏற்றி நாள்தான் மகாலட்சுமி வீட்டுக்குள் நுழைவாள் என்பது ஐதீகம். இதனால் விளக்குகளை அணைத்து விடாமல், பூஜை அறையில் மட்டுமாவது இரவு முழுவதும் எரியும் வகையில் வைக்க வேண்டும்.
- மேலும் விளக்கேற்றுவதற்கு நல்லெண்ணெய் பதிலாக பசுநெய் வைத்து விளக்கு ஏற்றலாம். இதனால் வீட்டிற்கு மகிழ்ச்சியை கொண்டு வரும். அப்படி இல்லை என்றால் நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் கொண்டு விளக்குகள் ஏற்றலாம்.