ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுநர்களுக்கான எழுத்துத் தேர்வு நாளை நடைபெறுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 108 ஆம்புலன்சில் காலியாக உள்ள மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணிகளுக்கான எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வருகின்ற புதன்கிழமை நடைபெறுகிறது. இந்த தேர்வானது காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஈரோடு அரசு மருத்துவமனையில் உள்ள டி.பி ஹாலில் நடைபெறும். இதில் கலந்து கொள்ள 19 வயது முதல் 30 வயது உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் அவர்கள் பி.எஸ்.சி. நர்சிங், ஜி.என். எம்., ஏ. என். எம்., டி.எம். எல். டி., ஆகிய படிப்புகளை படித்திருக்க வேண்டும். இதில் கலந்து கொள்ளுபவர்கள் எழுத்து தேர்வு, மருத்துவம் சார்ந்த மற்றும் மனித வளத்துறையின் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுபவர்.
இதில் மருத்துவ உதவியாளர் பணியிடத்திற்கு மாதம் 14 ஆயிரத்து 966 ரூபாய் சம்பளம் வழங்கப்படும். அவர்கள் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றிருந்தால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் அவர்கள் ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தபட்ச 3 ஆண்டுகள் மற்றும் பேட்ஜ் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 162.5 சென்டிமீட்டர் உயரத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும். அதேபோல் டிரைவர் பணியிடத்திற்கு 14 ஆயிரத்து 766 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும். இந்தப் பணியிடத்திற்கு எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனித வள துறை நேர்காணல், கண்பார்வை சம்பந்தப்பட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு ஆகியவை மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் கலந்து கொள்பவர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 73977-24829,91500-84156,73388-94971 இந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.