தேமுதிகவிற்கு மாநில அவையில் சீட் கிடைக்குமா என்ற கேள்விக்கு அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா மற்றும் பழனிச்சாமி ஆகியோர் அளித்த பதில்கள்.
“தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை பொருத்தவரை எங்களுடைய கூட்டணி தர்மத்தை என்றைக்கும் கேப்டனும் கேப்டனை பின்தொடரும் நாங்களும் கடைபிடிக்கிறோம் உறுதியாக முதலமைச்சர் அவர்களும் அந்த கூட்டணி தர்மத்தோடு நிச்சயம் ராஜ்யசபா எம்பி தருவார் என நினைக்கிறோம். பொருத்திருந்து பார்க்கலாம்” இவ்வாறு பிரேமலதா கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி “கேட்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. அதனை முடிவு செய்ய வேண்டியது தலைமை கழகம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பல மூத்த தலைவர்கள் இருக்கின்றார்கள். அதையும் நாங்கள் பார்க்க வேண்டும். எல்லாம் தலைமை கழகத்தின் நிர்வாகிகள் கூடி முடிவு எடுப்பார்கள்” என பதிலளித்துள்ளார்.