கொரோனா வைரஸ் தொற்றினால் தென்கொரியாவில் புதிதாக 169 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் பரவி கிடக்கும் கொரோனா வைரசால் மக்கள் அச்சமடைந்து உள்ளனர். இதுவரையில் 2,700க்கும் மேற்பட்டோர் கொரோனாவின் கோர தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர். மேலும் 78 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கொரோனா 37 நாடுகளுக்கு பரவியிருக்கிறது. அதில் தென்கொரியாவும் அடங்கும். கொரோனா வைரஸ் தொற்றினால் தென் கொரியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,146 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம் குவைத்தில் புதிதாக இருவருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. அதன்காரணமாக கொரோனா வைரஸினால் குவைத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 11 ஆக அதிகரித்துள்ளது. அதே வேளையில் கொரோனா வைரஸ் பரவல் குறித்த அச்சத்தின் காரணமாக பஹ்ரேனில் உள்ள பாடசாலைகள், முன்பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் என அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வரும் 2 வாரங்களுக்கு அவை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.