Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய மாணவன்….. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

சென்னையில் உள்ள வால்டாக்ஸ் சாலை கல்யாணபுரம் என்ற பகுதியில் 16 வயது மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பில் படித்து வந்துள்ளார். அவரின் வீட்டின் அருகே உள்ள மாணவரும் அந்த மாணவியும் நண்பர்களாக பேசி பழகி வந்துள்ளனர். பின்னர் நாளடைவில் அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து பேசிய நிலையில் அது காதலாக மாறியது. பிறகு இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவி கர்ப்பம் ஆகியுள்ளார்.

கர்ப்பத்திற்கு காரணமான பத்தாம் வகுப்பு மாணவன் திடீரென தலைமலை வாங்கி விட்டதாகவும் போலீசார் அந்த மாணவனை வலை வீசி தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.மேலும் கர்ப்பமான மாணவி, ராயபுரம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பள்ளியில் படித்து வந்த பத்தாம் வகுப்பு மாணவி மாணவனால் கர்ப்பமான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |