பள்ளி பேருந்துக்குள் மலை பாம்பு பதுங்கியிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாவட்டத்தில் உள்ள பேரேலி பகுதியில் ஒரு சர்வதேச தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் பேருந்துக்குள் மலைப்பாம்பு ஒன்று சென்றுள்ளது. இந்த மலைப்பாம்பு ஒரு ஆட்டுக்குட்டியை விழுங்கி விட்டு பேருந்துக்குள் பதுங்கி இருந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சீட்டின் அடியில் இருந்த மலைப்பாம்பை ஒரு குச்சியை பயன்படுத்தி சாக்குக்குள் பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் திடீரென மலைப்பாம்பு சாக்கை பிடிப்பதற்கு பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து வண்டியின் எஞ்சினுக்குள் மலை பாம்பு சென்று பதுங்கிக் கொண்டது.
இதைத்தொடர்ந்து வனத்துறையினர் பாம்பின் மீது ஒரு கயிறை கட்டி 1 மணி நேரமாக போராடி அதை பத்திரமாக வெளியே இழுத்து மீட்டனர். இதில் யாருக்கும் எவ்வித பிரச்சனையும் ஏற்படவில்லை. மேலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பள்ளிக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. இதனால் பாம்பினால் ஏற்படக்கூடிய மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
A python rescued from a school bus in Raibareli, UP. pic.twitter.com/1mP3EY9njc
— Piyush Rai (@Benarasiyaa) October 16, 2022