கீரிப்பிள்ளையின் வாயில் கோழி சிக்கியது போல் அதிமுகவினர் சிக்கியுள்ளனர் என மனிதநேய ஜனதா கட்சி எம்எல்ஏ தெரிவித்துள்ளார்
குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் கீரிப்பிள்ளை வாயில் சிக்கிக்கொண்ட கோழியைப் போல அதிமுக அரசு உள்ளது என மனிதநேய ஜனதா கட்சி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது
“இந்த சட்டங்கள் CAA , NRC குறித்து அதிமுக தலைவர்களுக்கு சரியான புரிதல் இல்லை எனவே அதிமுகவினர் அரசியல் நெருக்கடியால் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். அதாவது கீரிப்பிள்ளை வாயில் கோழி சிக்கிக் கொண்டது போல பாஜகவின் வலையில் அதிமுக சிக்கிக்கொண்டு தவிக்கின்றது. அதனால் அவர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாமல் இருக்கிறார்கள்”
எனக் கூறியுள்ளார்