3 லட்ச ரூபாய் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசி(56) என்ற மனைவி உள்ளார். இவர் தனது வீட்டிலேயே ஊட்டச்சத்து மையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் தமிழரசிக்கு அதே பகுதியில் வசிக்கும் சத்யா என்பவர் அறிமுகமானார். இதனை அடுத்து வங்கியில் கடன் வாங்கி தருகிறேன் என சத்யா ஆசை வார்த்தைகள் கூறியதால் தமிழரசி அவரிடம் 1 லட்சத்து 26 ஆயிரத்து 700 ரூபாயை கொடுத்துள்ளார்.
ஆனால் நீண்ட நாட்களாகியும் சத்யா வங்கியில் கடன் வாங்கி கொடுக்கவில்லை. இதனால் பணத்தை திரும்ப கேட்டபோது சத்யா காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதே போல் சத்யா அதே பகுதியில் வசிக்கும் பலரிடம் இருந்து 3 லட்சத்து 7 ஆயிரத்து 450 வரை மோசடி செய்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் சத்யாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.