அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்த 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் அனுமதி இல்லாமல் பட்டாசுகள் வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேஷ் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். அதன்படி போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று கடலூர் புதுப்பாளையம் பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அமராவதி, சதீஷ்குமார், அக்பர் அலி மோகன், லட்சுமி சீனிவாசன் ஆகிய 6 பேரும் சட்ட விரோதமாக எளிதில் தீப்பற்ற கூடிய பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களிடம் இருந்த 51 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.