மெக்சிகோ நாட்டில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோ நாட்டின் குவானா ஜூவாட்டோ மாகாணத்தில் ஈராப்புவாட்டோ நகரில் பார் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்திருக்கின்றனர் அவர்களில் ஆறு பேர் ஆண்கள் மற்றும் ஆறு பேர் பெண்கள் மேலும் மூன்று பேர் காயமடைந்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் இது பற்றி தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கி சூடு நடத்தி தப்பி சென்றவர்களை தேடும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக தென்மேற்கு மெக்ஸிகோவில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் நகர மேயர் உட்பட 18 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கதாகும்.