Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆங்கிலமே வேண்டாம்…! ஹிந்தி தான் வேணும்… முடிவெடுத்த BJPஅரசு.. செம போடுபோட்ட வைகோ வாரிசு…!!

செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, ஆங்கிலம் இல்லாத இந்தியா உருவாக்க வேண்டும் என்று அமித் ஷா சொல்லிருக்கார். நம்முடைய தமிழ்நாட்டு மாணவர்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும், இந்திய மாணவர்கள் சாஃப்ட்வேர் எடுத்துக்கலாம்,  மெடிசன் பில்ட்டா இருக்கலாம்,  எந்த துறையாக இருந்தாலும், இந்திய மாணவர்கள் சிறந்த வல்லுனர்களாக இருக்கிறார்கள்.

அதற்கு முக்கிய காரணம்.. ஆங்கில புலமை. மாணவர்களின் ஆங்கிலப் புலமை. உலகத்துடைய முன்னேற்றத்திற்கு ஆங்கில மொழி முக்கியம். 20 வருஷத்துக்கு முன்னாடி சைனா,  ஜப்பான் இங்கிலீஷ் வேண்டாம் என்று சொல்லிட்டு இருந்தாங்க. ஆனால் 20 வருஷத்துக்கு முன்னாடி என்ன நினைச்சாங்கன்னா ?  அடுத்து வரக்கூடிய தலைமுறைக்கு ஆங்கிலம் அவசியம் என உணர்ந்தார்கள். இன்று உலகமயமாக்கல் இருக்கு.

இந்த மாதிரியான சூழல்ல ஆங்கிலம் கண்டிப்பாக தேவை என்று அவங்களுடைய கல்விக் கொள்கையை மாற்றிக்கிட்டாங்க. அப்படி இருக்கும்போது இன்னைக்கு,  நம்முடைய மாணவச் செல்வங்களுடைய எதிர்காலத்தை பாதிக்கிற மாதிரி ஆங்கிலமே வேண்டாம். நமக்கு சமஸ்கிருதம்,  இந்தி மட்டும் வேண்டும் என்று சொல்லுறாங்க என தெரிவித்தார்.

Categories

Tech |