இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் தளமாக அமேசான் நிறுவனம் இருக்கிறது. இந்த அமேசானில் தற்போது பண்டிகை காலத்தை முன்னிட்டு எக்கச்சக்க ஆஃபர்கள் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவிந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் அமேசான் நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு குடோன் அமைந்துள்ளது. இந்த குடோனில் பொதுமக்கள் ஆர்டர் செய்த பொருட்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென மர்ம நபர்கள் சிலர் குடோனின் சுவரில் துளையிட்டு அங்கிருந்த பொருட்களை திருடி சென்றுள்ளனர்.
அந்த குடோனின் சுவற்றை கடப்பாறியால் துளையிட்டுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலை ஊழியர்கள் குடோனுக்கு வந்து பார்த்தபோது பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப் பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ஆம்பூர் டவுன் காவல் நிலையத்தில் ஊழியர்கள் புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் குடோனில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்ததோடு சிசிடிவி ஆதாரங்களை வைத்து குற்றவாளிகளை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.