இன்று நடந்த தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி துணைத் தலைவராக இருக்கை ஓபிஎஸ்க்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. இதனால் இந்த கூட்டத்தை எடப்பாடி தலைமையிலான அதிமுக, இன்றைய சட்டசபை கூட்டத்தை புறக்கணித்தார். முன்னதாகவே நான்தான் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்று சபாநாயகருக்கு ஓபிஎஸ் இரண்டு முறை கடிதம் எழுதி இருந்தார். அதேபோல எடப்பாடி தலைமையிலான அதிமுகவும் அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி உதயகுமாரை நியமித்து உள்ளோம்.
எனவே அவருக்கான இருக்கையை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்போடு தொடங்கிய தமிழக சட்டப்பேரவையில் ஓபிஎஸ்க்கு எதிர்கட்சி துணைத் தலைவர் இடம் ஒதுக்கிடு செய்யப்பட்டது. இது தொடர்பாக இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார்.
அதில், மாண்புமிகு மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட அதிமுகவினுடைய 51 வது ஆண்டு விழா இன்னைக்கு சிறப்பாக அவர்கள் கொண்டாடிட்டு இருப்பதாக தகவல் சொன்னார்கள். அதன் அடிப்படையில் இன்னைக்கு அதிமுக அவருக்கு வராம இருக்காங்க என நான் நினைச்சுட்டு இருக்கேன், நாளைக்கு அவுங்க வருவாங்க என தெரிவித்தார்.