விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 9-ம் தேதி முதல் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே பார்வையாளர்களிடம் கவனத்தை ஈர்த்து வருகிறது. பிக்பாஸ் போட்டியாளர்களில் ஜி.பி முத்து மற்றும் ஜனனியை பலருக்கும் பிடித்திருக்கிறது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது நாமினேஷன் அறிவிக்கப் பட்டுள்ளது. இது குறித்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. நாமினேஷனில் ராபர்ட் மாஸ்டர் ஆயிஷாவின் பெயரை தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு ஜி.பி முத்து குவின்சியை நாமினேசன் செய்துள்ளார். அதாவது குயின்சி தனக்கென 2, 3 பேர்களை வைத்துக்கொண்டு அவர்களிடம் மட்டுமே பேசி கொள்கிறார் என ஜி.பி முத்து குற்றம் சாட்டியுள்ளார். இதனையடுத்து குயின்சி ரச்சிதாவின் பெயரை நாமினேட் செய்துள்ளார். அதாவது ரச்சிதாவுக்கு இன்னொரு முகம் இருக்கிறது என்றும், அந்த முகத்தை அவர் இன்னும் காட்டவில்லை எனவும் குயின்சி கூறியுள்ளார். மேலும் குயின்சியிடம் அசல் அத்துமீறும் ஒரு வீடியோவானது தற்போது இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ரசிகர்கள் அனைவரும் அசல் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.