ஈரோடு மாவட்டத்தில் காலியாக இருக்கும் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வருகிற 19-ஆம் தேதி(புதன் கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்வு காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஈரோடு அரசு மருத்துவமனையில் இருக்கும் டி.பி ஹாலில் வைத்து நடைபெறுகிறது. இந்நிலையில் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பணிக்கு 19 முதல் 30 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண்கள் பிஎஸ்சி நர்சிங், ஜி.என்.எம்., ஏ.என்.எம்., டி. எம்.எல்.டி படித்திருக்க வேண்டும்.
இல்லை என்றால் லைப் சயின்ஸ் பட்டதாரிகள் பி.எஸ்.சி பாட்டனி, ஜூவாலஜி, மைக்ரோ பயாலஜி, பயோ கெமிஸ்ட்ரி, பயோ டெக்னாலஜி, பிளன்ட் பயாலஜி படித்திருக்க வேண்டும். இதனை அடுத்து மருத்துவ பணியாளர் பணிக்கு 14 ஆயிரத்து 966 ரூபாய் சம்பளமும், ஓட்டுனர் பணியிடத்திற்கு 14 ஆயிரத்து 766 ரூபாய் சம்பளமும் வழங்கப்படும். இதே போல் ஓட்டுநர் பணியிடத்திற்கு 24 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்ட 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று அறிவியல் சார்ந்த பட்டம் பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.
மேலும் சம்பந்தப்பட்டவர்கள் கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். இவர்கள் எழுத்து தேர்வு, தொழில்நுட்ப தேர்வு, மனிதவளத்துறை நேர்காணல், கண்பார்வை சம்பந்தப்பட்ட தேர்வு, சாலை விதிகளுக்கான தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எனவே தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் இருப்பவர்கள் அசல் சான்றிதழ்களை கொண்டு வந்து முக கவசம் அணிந்து தேர்வில் கலந்து கொள்ளலாம். இது குறித்த விவரங்களுக்கு 7397724829, 9150084156, 7338894971 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பேசலாம்.