டாஸ்மாக் வருமானம் தமிழக அரசின் வருவாய்களில் முக்கியமான பங்கு வகிக்கிறது. இவ்வாறு அதிக வருமானம் ஈட்டும் டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு ஆண்டும் முக்கிய பண்டிகைகளை முன்னிட்டு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்படும் அதேபோல கடந்த வருட தீபாவளிக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் 431 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வருட தீபாவளி பண்டிகையொட்டி டாஸ்மாக் கடைகளில் 600 கோடி ரூபாய்க்கு அது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எனவே தமிழகத்தில் மதுபானம் குறைவாக விற்பனை ஆகும் மாவட்டங்களை கண்டறிந்து அதற்கான காரணத்தை ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இவற்றை மண்டல மேலாளர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த ஆண்டு தீபாவளியை ஒட்டிய 2 நாட்களில் 431 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை ஆனது. இந்த ஆண்டு விற்பனை 450 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.