தீபாவளியை முன்னிட்டு 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரைக்கு உண்டான தொகை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டதால், அவர்கள் வீட்டுக்குள் முடங்கினர். இந்த கொரோனாவின் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்கள் பண்டிகையை பெரிய அளவில் கொண்டாடவில்லை. தற்போது தான் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பழைய நிலை மெல்ல மெல்ல திரும்பி இருக்கிறது. இதனால் இந்த ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை மக்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.. இதற்காக மக்கள் அனைவரும் கடைகளுக்கு சென்று புது ஆடைகளை வாங்க குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் புதுச்சேரி ஆளுநர் ரங்கசாமி தட்டாஞ்சாவடி பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் பாப்ஸ்கோ தீபாவளி சிறப்பு அங்காடியை திறந்து வைத்தார். அதன்படி அந்த சிறப்பு அங்காடியில் சிறப்பு மானிய விலையில் 25 மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து செய்தியாளிடம் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை ஆகியவற்றிற்கு உண்டான பணம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றார்.
மேலு எங்களுடைய அரசினுடைய தலைமை பண்பு குறை தீர்க்க வேண்டும் என்பதுதான். மக்களுடைய குறைகளை கேட்டு தீர்க்கப்பட வேண்டியது தான் எங்களது எண்ணம். அதன் அடிப்படையில் தான் இதுவரையில் குறைகள் கேட்கப்பட்டு தீர்க்கப்பட்டு வருகின்றது. புதுச்சேரி வளர்ச்சிக்கான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது என்றார்.