Categories
சினிமா தமிழ் சினிமா

“நயன்-விக்கி விவகாரம்”…. என்ன நடவடிக்கை…? அமைச்சர் பேட்டி….!!!!!!

நயன்தாரா விவகாரத்தில் அறிக்கை கிடைத்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என பேட்டியில் அமைச்சர் கூறியுள்ளார்.

தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஜாலியாக ஹனிமூன் சென்று வந்தனர்.

இந்நிலையில் திருமணமான 4 மாதத்தில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என அறிவித்துள்ளார். இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது தான் தற்போதைய ஹாலிவுட் ஹாட்பிட்டாக உள்ளது. இவர்கள் இருவரும் வாடகை தாய்முறையில் குழந்தை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு நிறைய சட்டவிதிகள் இருக்கும்போது இவர்கள் குழந்தை பெற்றது சட்டப்படி சரியா என்ற கேள்வி எழுந்து, சர்ச்சைகளை கிளப்பி வருகிறது.

இந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளதாவது, நயன்தாரா விவகாரத்தில் நான்கு பேர் கொண்ட குழுவை நியமித்து உள்ளோம். அந்த குழு விசாரணை செய்து வருகின்றது. முழு அறிக்கை கிடைத்த பின் எந்த மாதிரியான விதிமீறல் நடந்துள்ளது, விதிமுறைகளின் தன்மை சட்டத்திற்கு உட்பட்டதா? இல்லையா? என முழு விவரம் தெரிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

Categories

Tech |