Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட “140 விலங்குகள்”…. போலீசார் நடவடிக்கை ….!!!!

சட்டவிரோதமாக கடத்திக் கொண்டு வரப்பட்ட விலங்குகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மிசோரம் மாநிலத்தில் உள்ள இந்தியா -மியான்மர் எல்லை வழியாக எஸ்.யூ.வி. வாகனங்களில் வெளிநாட்டு விலங்குகள் கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி போலீசார் இந்தியா-மியான்மர் எல்லை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த எஸ்.யூ.வி. வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.

அந்த சோதனையில் வாகனத்தில் 30 ஆமைகள், 2  மர்மோசெட் குரங்குகள், 22 மலைப் பாம்புகள், 55 முதலை  குட்டிகள், பூனைகள், உடும்புகள் உள்ளிட்ட விலங்குகள் கடத்தி கொண்டு வரப்பட்டது  தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வாகனத்தில் வந்த 3  பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 140 விலங்குகளையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |