Categories
சினிமா

தலைவரின் ரிஷிகேஷ் பயணம்…. யாராலும் காண முடியாத அபூர்வ மனிதருடன் சந்திப்பு…. வைரலாகும் அரிய புகைப்படங்கள்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் அண்மையில் அண்ணாத்த திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தன்னுடைய 170-வது திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் குறித்த சில சுவாரசியமான தகவல்களை அவ்வப்போது ரசிகர்கள் இணையதளத்தில் பகிர்ந்து வரும் நிலையில், தற்போதும் ஒரு புதிய தகவலை பகிர்ந்துள்ளனர்.

அதாவது நடிகர் ரஜினிகாந்த் ரிஷிகேஷ் பயணம் செய்தது குறித்த தகவலை தான் தற்போது பகிர்ந்துள்ளனர். அதாவது நடிகர் ரஜினிகாந்த் ரிஷிகேஷ் சென்ற போது அங்கு யாராலும் சந்திக்க முடியாத ஒரு அபூர்வ ரிஷியை சந்தித்துள்ளாராம். அந்த அபூர்வ ரிஷி ஒரு குகைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறாராம். அவரை ரஜினிகாந்த் தேடி கண்டுபிடித்த பிறகு அந்த ரிஷியின் சீடர்களின் அனுமதியோடு அவரை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது அந்த ரிஷி நடிகர் ரஜினிகாந்தின் கையில் ஒரு வெற்றிலையை கொடுத்து சிறிது நேரம் மௌனமாய் இருந்துவிட்டு பின் சைகை மூலமாக அங்கிருந்து போ என்று கூறியுள்ளார். அதோடு 80 வயதுடைய அந்த அபூர்வ ரிஷியை பார்ப்பதற்காகவே நடிகர் ரஜினிகாந்த் அஜானுபாகுவாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் நடிகர் ரஜினிகாந்த் குகைக்குள் சென்ற போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்களையும் தற்போது இணையதளத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Categories

Tech |