Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இணையவழி கடன் செயலி…. “தூத்துக்குடியில் 1.35 லட்சம் மோசடி”…. இரண்டு பேர் அதிரடி கைது….!!!!!!

தூத்துக்குடியில் இணையவழி கடன் செயலி மூலம் 1.35 லட்சம் மோசடி செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி தெப்பக்குளம் தெருவை சேர்ந்த சௌந்தரராஜன் என்பவர் முகநூல் பக்கத்தில் சென்ற மாதம் 13ஆம் தேதி மோன்ஷோ என்ற பெயரில் இணையதள வழி கடன் செயலில் விளம்பரம் இருந்ததை பார்த்திருக்கின்றார். அவருக்கு கடன் தேவைப்பட்டதால் அந்த இணைப்புக்குள் சென்று இணைய வழி கடன் செயலியை பதிவிறக்கம் செய்திருக்கின்றார். அதில் தனது பெயர், முகவரி, வங்கி கணக்கு விவரம் உள்ளிட்டவற்றை பதிவு செய்து மூன்று லட்சம் கடன் கேட்டு விண்ணப்பித்திருக்கின்றார்.

அதன் பின்னர் அவரின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறிப்பிட்ட செல்போனில் எண்ணிலிருந்து தொடர்பு கொண்ட ஒருவர் அவரிடம் கடன் ஏற்பாடு செய்வதாக பல்வேறு காரணங்களை கூறி 1.35 லட்சம் பெற்றிருக்கின்றார். பணத்தை பெற்றுக்கொண்ட பின்னர் அந்த நபரை சௌந்தரராஜனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதன்பின் தான் ஏமாந்ததை உணர்ந்த அவர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் 45 ஆயிரம் 30 ஆயிரம் என 75 ஆயிரத்தை சௌந்தர்ராஜன் ஆன்லைன் மூலம் பரிமாற்றம் செய்த நபரின் வங்கி கணக்கு தூத்துக்குடியில் இருக்கும் குறிஞ்சி நகர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் இருப்பது என தெரிய வந்தது. மேலும் மோசடி செய்த மற்றொரு நபரின் செல்போன் எண்ணும் கிடைத்தது. அந்த அந்த எண்ணை வைத்து போலீசார் தேடிய போது தூத்துக்குடியில் இருந்தது தெரிய வந்தது.

இதன்பின் போலீசார் பாலசுப்ரமணியனை கைது செய்தார்கள். மேலும் தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் தலைவன்கோட்டை பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் என்பவரையும் கைது செய்தார்கள். இவர்கள் பயன்படுத்திய மூன்று வங்கி  கணக்குகளை ஆய்வு செய்ததில் இவர்கள் இரண்டு பேரும் நாடு முழுவதும் பலரிடம் ஏமாற்றி 4 கோடிக்கு மேல் மோசடி செய்தது தெரிய வந்தது. மேலும் பல்வேறு குற்ற செயலுக்கு உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. இதனால் போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பேரூரணியில் இருக்கும் சிறையில் அடைத்தார்கள்.

Categories

Tech |