Categories
உலக செய்திகள்

இந்தியா மீது அதிருப்தியில் இலங்கை…. என்ன காரணம்?… வெளியான தகவல்…!!!

இலங்கை அரசு இந்தியாவிலிருந்து இறக்குமதியான ரயில் பெட்டிகளில் இயந்திர கோளாறுகள் ஏற்படுவதாக அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நாட்டிலிருந்து சுமார் 160 ரயில் பெட்டிகளை இலங்கை இறக்குமதி செய்தது. இந்தியாவின் கடன் எல்லைக்குள்ளான சுமார் 120 கோடி ரூபாயில் இறக்குமதி செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் தொழில்நுட்ப கோளாறுகள் உள்ளது தெரிய வந்திருக்கிறது. நீளம், அகலம் மற்றும் உயரம் ஆகிய வேறுபாடுகள் அந்த பெட்டியில் உள்ளது.

இதன் காரணமாக, அந்த ரயில்கள் இலங்கை தண்டவாளங்களில் சரியாக செயல்படாமல்  இருக்கிறது. எனவே, ரயில் செல்லும் வேகமும் பாதிப்படைந்திருக்கிறது. இந்த ரயில் பெட்டிகளால் இலங்கை அதிருப்தியடைந்துள்ளது. தங்களின் குறிப்பிட்ட நோக்கம் எதையும் இந்த பெட்டிகள் பூர்த்தி செய்யவில்லை என்று ரயில்வே கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Categories

Tech |