ஜோதிர் மடத்தின் புதிய சங்கராசாரியார் பொறுப்பேற்பு விழாவை நிறுத்தி உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள கோவர்த்தன மடத்தின் சங்கராசாரியாக சுவாமி ஸ்வரூபானந்த் சரஸ்வதி இருந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். இதனால் புதிய சங்கராசாரியாராக அவிமுக்தேஷ்வரானந்த சரஸ்வதி நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு எழுந்தது. இவர் அடுத்த வாரிசாக தம்மை பொய்யாக அறிவித்து கொண்டதாக இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த வழக்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த நிலையில் புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் பீடத்தின் தலைமை பொறுப்பை தகுதியற்ற ஒருவர் அங்கீகாரம் இல்லாத வகையில் ஏற்பது, இந்த நீதிமன்ற நடைமுறைகளை பயனற்றதாக மாற்றும் முயற்சியாகும்.
புதிய சங்கராசாரியார் நியமனத்தில் ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகள் மீறப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர். கவாய், பி.வி. நாகரத்னா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜோதிர் பீட புதிய சங்கராசாரியாக அவிமுக்தேஷ்வரானந்த சரஸ்வதி நியமிக்கப்படுவதை நாம் அங்கீகரிக்கவில்லை. மேலும் ஜோதிர் மடத்தின் புதிய சங்கராசாரியாக இவர் பொறுப்பேற்பு நிறுத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் வரும் 17-ஆம் தேதி நடைபெற இருந்த இந்த நிகழ்ச்சி தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.