பண்டிகை காலம் தொடங்கி இருக்கின்ற நிலையில் அனைவரும் ஊருக்கு செல்ல ரயிலில் டிக்கெட் புக்கிங் செய்ய முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அதிகமானோர் டிக்கெட் புக்கிங் செய்வதால் கன்ஃபார்ம் டிக்கெட் கிடைப்பதில் மிகப்பெரிய சிரமம் இருக்கிறது. அந்த வகையில் சொந்த ஊருக்கு குடும்பத்தோடு சென்று பண்டிகை கொண்டாட நினைப்பவர்களுக்கு ரயில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் மிகவும் எரிச்சல் அடைகின்றார்கள் டிக்கெட் கன்ஃபார்ம் செய்வதற்கு வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என்றெல்லாம் முயற்சி செய்து வருகின்றார்கள். அந்த வகையில் தட்கல் டிக்கெட் மூலமாக கன்பார்ம் செய்ய ஒரு வழி இருக்கிறது.
அதாவது ஐஆர்சிடிசியில் இருந்து தட்கல் டிக்கெட் விலை முன்பதிவு செய்வதற்கு முன் உங்கள் சுயவிவரத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். இதன் நன்மை என்னவென்றால் தட்கல் டிக்கெடுகளை முன்பதிவு செய்யும்போது எல்லா விவரங்களையும் நிரப்ப வேண்டியது இல்லை. மேலும் உங்கள் தகவல்கள் அனைத்தும் சுய விவரத்தில் சரியாக இருந்தால் தட்கல் டிக்கெட் புக்கிங் போது ஈசியாக இருக்கும் அதன் பின் டிக்கெட் முன் பதிவு நேரம் பற்றிய தகவல்களை சேகரிக்க வேண்டும் ஏசி தட்கல் முன்பதிவு காலை 10 மணிக்கு, ஸ்லீப்பர் வகுப்பு முன்பதிவு காலை 11 மணிக்கு தொடங்குகிறது.
இந்த முன்பதிவு தொடங்கும் முன் தளத்தில் உள் நுழைந்து தயாராக இருக்க வேண்டும். முன்பதிவு தொடங்கியவுடன் புறப்படும் ஊர் செல்லும் ஊர் தொடர்பான விவரங்களை நிரப்பு தொடங்க வேண்டும். அதன்பின் நீங்கள் ஏற்கனவே நிரப்பி வைத்திருக்கும் உங்களின் சுய விபரங்கள் தானாக நிரப்பிக் கொள்ளும் இதன் மூலமாக உங்களின் நேரம் மிச்சமாகின்றது. மேலும் தட்கல் டிக்கெட்டில் நேரம் என்பது மிக மிக முக்கியமாகும். இறுதியாக டிக்கெட்டுக்கு பணம் செலுத்துவதற்கான ஆப்ஷனை பெறுவீர்கள் மற்ற கட்டண முறைகளை தவிர்த்து யுபிஐ மூலமாக பணத்தை செலுத்த முயற்சி செய்யுங்கள் ஏனென்றால் யுபிஐயை தான் பணம் செலுத்துவதற்கான வேகமான மற்றும் ஈஸியான தளமாக இருக்கின்றது. இவற்றையெல்லாம் வேகமாக செய்யும் நேரத்தில் மட்டுமே உங்களின் ரயில் டிக்கெட் கன்ஃபார்ம் ஆக வாய்ப்பு இருக்கிறது.