Categories
மாநில செய்திகள்

ஒரே வருடத்தில் 2 வது முறையாக நிரம்பிய வைகை அணை…. மகிழ்ச்சியில் விவசாயிகள்…!!!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில்  வைகை அணை நீர்மட்டம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முழு கொள்ளளவை எட்டியது. இதனையடுத்து அணையில் இருந்து மதுரை, சிவசங்கை, திண்டுக்கல் மாவட்டம் முதல்போக மற்றும் ஒரு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்ததால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டதால் பாசனத்திற்கு திறக்கப்பட்டதுடன் உபரிநீரும் ஆற்றில் திறக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு கடந்த இரண்டு வாரங்களாக நீர் பிடிப்பு பகுதிகளில் மழை எதுவும் பெய்யாத நிலையில் தண்ணீர் திறப்பதும் நிறுத்தப்பட்டது‌‌.

இந்நிலையில் வைகை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2000 கன அடியாக அதிகரித்தது.  வைகை அணை நீர்மட்டம் இன்று காலை 68.50 அடியாக எட்டியது. அதனை தொடர்ந்து தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணைக்கு வினாடிக்கு 2094 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், இறுதி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே உபரிநீராக திறக்கப்படும். மேலும் வைகை அணை நீர்மட்டம் ஒரே ஆண்டில் இரண்டாவது முறையாக நிரம்வபுவதால் 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |