Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்புகளை காவு வாங்க காத்திருக்கும் புதிய தொழில் நுட்பங்கள்..!!

ஒரு மாபெரும் ராட்சஸ ஆக்டோபஸை போல, ஒரு மாபெரும் சுனாமி போல ஒட்டுமொத்த உலகத்தையும் ஆக்கிரமிக்க போகிறது ஆட்டோமேஷன் தொழில்நுட்பம்..!

தொழிற்சாலைகள் முதல் நெடுஞ்சாலைகள் வரை அனைத்துத் துறைகளிலும் ஆட்டோமேஷன் ஆட்டம் ஆரம்பித்து விட்டது. செலவை குறைத்து வேலைகளை விரைவில் முடிப்பது தற்போது சாதனை போல் தோன்றினாலும் வரும் காலங்களில் இந்த தொழில்நுட்பமானது ஒட்டுமொத்த உலகின் வேலை வாய்ப்புகளையும் காவு கேட்கிறது என்பதுதான் இப்போது மனித இனத்தின் பயமாக இருக்கிறது.

இன்னும் 30 ஆண்டுகளில் அறிவுஜீவி இயந்திரங்கள் உலகின் பாதி பணியாளர்களை நீக்கி விடும் என்று உறுதியாகக் கூறுகிறார் கூஸ்டெர்ன்  நகரிலுள்ள ரைஸ் யுனிவர்சிட்டி பேராசிரியர் மோசே பார்ட்டி இன்டர்நேஷனல் டேட்டா கார்ட் ரீடர் எனப்படும் சர்வதேச நிறுவனத்தின் ஆய்வு படி உலகில் எந்த ஒரு வேலையும் நிரந்தரமானதும், பாதுகாப்பானதும் இல்லையாம். எல்லாமே ஒழிக்கப்படும் சாத்தியம் கொண்டவை கேட்டால் அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.

பாலியல் தொழிலாளிகளின் வேலைக்கு கூட பாதுகாப்பில்லாத நிலை வரும் என்று கூறப்படுகிறது. ஒரு காலத்தில் எஞ்சினுடன் பேட்டரியை இணைத்து காரை உருவாக்குவதை மனிதன்தான் செய்தான். கார் தொழிற்சாலையில் காரை வடிவமைப்பதில் இருந்து உதிரிபாகங்களை பொறுத்த்துவது  வரை அனைத்தையும் மனிதன்தான் செய்தான்.

தற்போது இந்த பணிகளுக்கு எல்லாம் ஆட்டோமேட்டிக் இயந்திரங்களை பயன்படுத்த தொடங்கி விட்டார்கள் என்பதை கூட ஏற்றுக்கொள்ளலாம். கியர் மாற்றி காரை ஓட்டி வந்த மனிதன். இன்று காரை ஓட்டுவதற்கு கூட தேவையில்லை அதையும் ஆட்டோமேஷன் தொழில்நுட்பமே பார்த்துக்கொள்ளும் என்கிற சூழல் உருவாகிவிட்டது.

2032 ஆம் ஆண்டு வாக்கில் பாதிக்குப் பாதி வாகனங்களை மனிதர்கள் ஓட்ட  மாட்டார்கள். முன்பு கார் தொழிற்சாலைகளில் உதிரி பாகங்களை இணைக்கும் பணியை செய்தவர்களில் வேலை இழந்தனர். ஆனால் இப்பொழுதோ வாகன ஓட்டுனர்களும் தங்கள் வேலை வாய்ப்பினை இழக்கும் அபாயத்தில் இருக்கிறார்கள்.

ஒரு தெருவிற்கு குறைந்தது 10 ஓட்டுனர்கள்  இருக்கும் சமூகம் நமது சமூகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக நகரங்களில் பல பேருக்கு பேருதவியாக இருக்கும் பகுதி நேர வேலை வாய்ப்புகளில் முக்கியமானது, டெலிவரி பாய் வேலை இப்போது அதற்கும் வந்துவிட்டது, புதிய வடிவிலான புது ஆஃப் வந்துவிட்டது, அதுதான் அமேசான் ப்ரைம்.

அமேசானின் வாடிக்கையாளர்கள் ஆடர் செய்யும் பொருட்களை டெலிவரி மேன்கள் இல்லாமல் டோர்ன் எனப்படும் ஆளில்லா சிறிய ஹெலிகாப்டர் மூலம் வாடிக்கையாளரின் வீட்டிற்கே நேரடியாக டெலிவரி செய்யும் முறை இந்த டெலிவரி முறையும் மேலும் பரவலாக்கப்பட்டு டோமடோ போன்ற உணவு டெலிவரி நிறுவனங்கள் மண்டி போன்ற மளிகை பொருட்கள் டெலிவரி நிறுவனங்களும் பயன்படுத்தும் பட்சத்தில், பல லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை இழக்கும் அபாயம் இருக்கிறது.

அடுத்ததாக அதிகப்படியான வேலை வாய்ப்பினை கொடுத்துக்கொண்டிருக்கும், துறை ஹோட்டல்கள் மற்றும் பார்கள் இப்பொழுது ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் மற்றும் சொகுசு கப்பல்களிலும்  விரைவில் ரோபோக்களை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ராயல், கரீபியன், ஃபேண்டசிஸ் என்ற சொகுசு கப்பலில் இருக்கும் பாரில் a1 மற்றும் b1 எனும் இரண்டு ரோபோக்களை அறிமுகம் செய்து இருக்கின்றனர்.

இந்த ரோபோக்கள் ஒரு நிமிடத்திற்கு 300 காப்ட்களை தயாரித்து அசத்தி வருகிறது. வரும் காலங்களில் இத்தகைய ரோபோக்கள் மேலும் நுண்ணறிவுத்திறன் கொடுத்த மேம்படுத்தும் போது உலகெங்கிலும் உள்ள ஹோட்டல் ஊழியர்கள் பெரும்பான்மையினரை வீட்டிற்கு அனுப்பி விடும் அபாயம் உள்ளது.

அடுத்ததாக ஆளில்லா சூப்பர் மார்க்கெட்டில் வர இருக்கின்றன, அங்கே பணியாட்கள் மட்டுமல்ல பில் கவுண்டர்  கூட இருக்காது. வாடிக்கையாளர்கள் வேண்டிய பொருட்களை எடுத்துக் கொண்டு போய்க் கொண்டே இருக்கலாம் சென்சார்கள் மூலம் யார், யார் என்னென்ன பொருட்களை எடுத்தார்கள் என்பது அறியப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து தொகை எடுத்துக்கொள்ளப்படும்.

தற்பொழுது டோல்கேட்டில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பாஸ்டர் தொழில்நுட்பம் போல யாரும் எங்கேயும் வரிசையில் நிற்க தேவையே இல்லை போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான். அதேசமயம் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்பவர்களும் வீட்டுக்கு கிளம்பி போய்க்கொண்டே இருக்கலாம்.

2028 ல் 95% விமான போக்குவரத்து ஆட்டோமேஷன் கட்டுப்பாட்டில் இருக்கும் IFR எனப்படும் இன்டர்நேஷனல் பெடரேஷன் ஆஃ ரோபாடிக்ஸ் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இப்பொழுது அமெரிக்காவில் மொத்தம் 15 முதல் 17.5 லட்சம் ரோபோக்கள் தொழிற்சாலை பணிகளில் இருக்கின்றனவாம்.

இந்த எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டில் 40 முதல் 60 லட்சமாக உயர்வு போகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 2036 ஆம் ஆண்டு வாக்கில் ஒரு தொழிற்சாலையில் 20க்கும் குறைவானவர்களே பணிபுரிபவர்களிடம் அதிர்ச்சியான தகவலையும் தெரிவிக்கின்றனர். போஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பொருளாதார பேராசிரியர்கள் இணைந்து சமீபத்தில் அமெரிக்காவில் தொழில்நுட்பங்களையும் வேலை இழப்புகள் பற்றிய ஆய்வினை நடத்தியுள்ளார்கள்.

அதன் முடிவுகள் ஆச்சரியமானவை மட்டுமல்ல அச்சமூட்டும் வகையாகவும் இருக்கின்றன. 1990 முதல் இன்று வரை அமெரிக்காவில் ரோபோக்களின் எண்ணிக்கை 4 மடங்காக அதிகரித்துள்ளதாகவும், இதனால் பறிக்கப்பட்ட வேலைகளும் 3.6 லட்சம் முதல் 6.7 லட்சம் வரை எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைந்த உத்தேசத்தில் கணக்கிட்டாலும் அடுத்த 10 ஆண்டுகளில் 17 லட்சம் முதல் 32 லட்சம் வரை அமெரிக்கர்கள் பணியிடம் அமெரிக்கர்களின் நிலையே இப்படி என்றால் அங்கே பணிபுரியும் மற்ற நாட்டவர்கள்நிலை நினைத்துப் பாருங்கள்.

புதிதாக வரும் ஒவ்வொரு ரோபோவும் சராசரியாக 5.6 மனிதர்களின் வேலைக்கும் உலை வைக்கிறதாம். இவற்றையும் மீறி இருப்பவர்களின் ஊதியம் பாதியாக குறைக்க பட்டிருக்கும். இவை அமெரிக்காவின் நிலைமை பற்றி ஆய்வு அறிக்கை தான் என்றாலும் இந்த அறிக்கையை வைத்துக் கொண்டு உலக நாடுகள் ஒப்பிட்டுப் பார்த்து தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.

உலக வங்கியின் 2016ம் ஆண்டு வரை முன்னேறிய நாடுகளில் ரோபோக்கள் அடுத்த 20 ஆண்டுகளில் 57 சதவீத பணிஇழப்புகள் இழக்க உருவாக கூடும் என சொல்கிறது. மேலும் மற்றொரு புள்ளி விவரப்படி 2025 இல் அமெரிக்காவில் 2.27 கோடி வேலைவாய்ப்புகள் ரோபோக்களால் நிரப்பப்பட்டிருக்கும்.

இதனால் மனிதர்களுக்கு 16% பேர் இறப்பு நிகழும் அப்பொழுதும் மனிதர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் ஆனால் அதை எப்படி இருக்குமென்றால் ரூபாய் 10 வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டு ஒரு மனித வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். இன்று படிக்கவில்லை என்றாலும் கூட மூட்டை தூக்குவது பிழைத்துக் கொள்ளலாம் என்கின்றனர்.

ஆனால் நாளை அதற்கும் ரோபோக்கள் வந்துவிடும் ஆட்டோமேஷன் துறையை இரண்டாக பிரித்துக் கொள்ளலாம். ஒன்று  ரோபோக்கள் மற்றொன்று ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ரோபோக்கள் ஏற்கனவே பல துறைகளில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன.

மேலும் அவை தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு கொண்டே இருக்கின்றனர.  மற்றொரு பக்கம் மனிதர்களைப் போலவே சிந்தித்து செயல்பட வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் அதிவிரைவாக உருமாறிக் கொண்டிருக்கிறது.

இப்பொழுது விடையும்  என்னவென்றால் இந்த இரண்டு மாபெரும் தொழில் நுட்பங்களின்  இடையில் உள்ள எல்லைக்கோடு மெல்ல, மெல்ல அழியத் தொடங்கி இருக்கிறது. இவை நாளை உலக சமுதாயத்திற்கு நன்மை செய்யப் போகிறதா.? அல்லது நாசம் செய்யப் போகிறதா.? என்பதை தெரிவியுங்கள்..

 

Categories

Tech |