kgf படத்தின் இரண்டு பாகங்கள் வெளியான பின்பு கதை உருவாக்கம் மற்றும் வியாபார ரீதியாக முன்னணி வரிசைக்கு வந்துள்ளது கன்னட சினிமா. இந்த நிலையில் தற்போது சமீபத்தில் வெளியான காந்தாரா எனும் திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கன்னட சினிமாவின் நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி இந்த படத்தில் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருக்கின்றார்.
தென்னிந்தியாவின் சினிமாவின் பிரபல நட்சத்திரங்கள் பலரும் இந்த படத்தை வியந்து பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தை பற்றி நடிகர் பிரபாஸ் பேசும்போது காந்தாரா படத்தை இரண்டாவது முறையாக பார்த்தேன் என்ன ஒரு அற்புதமான அனுபவமாக அது இருந்தது. ஒரு அருமையான கான்செப்ட் மற்றும் திரில்லிங் கிளைமாக்ஸ் கட்டாயம் தியேட்டருக்கு சென்று பார்க்க வேண்டிய ஒரு படம் என பாராட்டி இருக்கிறார்.