தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் பேராதரவில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோதான் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் ஆறாவது முறையாக பிக் பாஸ் தமிழ் சீசன் 6 என்னும் தலைப்பில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. தமிழில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியின் தொடக்க காலத்தில் இருந்து தொகுப்பாளராக உலக நாயகன் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சிக்கு ஆறாவது முறையாக பணியாற்றி வருகின்றார். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 ஒரு வாரம் மட்டுமே முடிந்திருக்கின்றது.
ஆனால் இப்போதே பல பிரச்சனைகள் மற்றும் மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிலும் தனலட்சுமி தான் பல பிரச்சினைகளிலும் இருந்தார். ஜி பி முத்து விடம் அவர் பேசிய விதம் தான் அவரது பெயரை அதிகமாக டேமேஜ் செய்துள்ளது. இதனை அடுத்து சமூக வலைதளங்களில் அவரை அதிகம் பேர் ட்ரோல் செய்து வருகின்றார்கள் தனலட்சுமி தான் இந்த சீசன் ஜூலி என கூறவும் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று பிக் பாஸ்க்கு வந்திருக்கும் கமல் தனலட்சுமி விலாசி உள்ளார். நினைத்ததை எல்லாம் பேசலாம் என நினைத்து வந்தேன் ஆனால் என்னால் இங்கு அதை செய்ய முடியவில்லை என தனலட்சுமி கூற, அதற்கு கமல் வெளியே மட்டும் உங்களுக்கு வாய்ப்பு கொடுத்தார்களா போனை எடுத்து ஏதோ செய்தீர்கள் அந்த முனைப்பு ஏன் இங்கு காட்ட மாட்டேங்கிறீங்க. மனம் உடைந்து வெளியே போய் அழறீங்க அப்படியே வெளியே அனுப்பிற போறாங்க என கமல் விலாசி இருக்கிறார்.