தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கி உள்ளார். வலிமை படத்திற்கு பிறகும் மீண்டும் வினோத் இயக்கத்தில் போனி கபூரின் தயாரிப்பில் “துணிவு” படத்தில் நடித்து வருகிறார். இப்படத் தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாத துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் 1987 ஆம் ஆண்டு பஞ்சாபில் நடந்த ஒரு வங்கி கொள்ளை அடிப்படியாக வைத்து உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மஞ்சுவாரியர், சமுத்திரகனி, ஜி.எம். சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
துணிவு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் நடைபெறும் துணிவு திரைப்பட படப்பிடிப்பின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி சென்னை அண்ணாச்சாலையில் உள்ள எல்.ஐ.சி. கட்டிடம் அருகில் துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் அஜித் மஞ்சு வாரியர் பங்கு பெரும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து அஜித்தை காண ரசிகர்கள் பலர் அங்கு குவிந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தலைவர் மற்றும் தளபதி விஜய் தொடர்ந்து தலையை காண ரசிகர்கள் குவிந்தது குறிப்பிடத்தக்கதாகும்.