டி20 உலக கோப்பையில் இதுவரை நடந்த சாதனைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்..
8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று ஆஸ்திரேலியாவில் தொடங்கியுள்ளது. இன்று தொடங்கியுள்ள இந்த போட்டி ஆஸ்திரேலியாவின் 7 நகரங்களில் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் முதல் சுற்றில் 8 அணிகள் இடம் பிடித்திருக்கிறது, அதில் ஏ பிரிவில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பி பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவிலுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இறுதியில் இரு டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.
சூப்பர் 12 சுற்றில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 8 அணிகள் இடம் பிடித்துள்ளன. இதற்கிடையே நடைபெறும் முதல் சுற்றுப்போட்டியில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12க்கு முன்னேறும். சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் 22ஆம் தேதி மோதுகின்றன.
சூப்பர் 12 சுற்றில் இரு பிரிவுகளாக (6 அணிகள்) பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரு பிரிவிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு செல்லும். இந்தியா தனது முதல் சூப்பர் 12 போட்டியில் 23ஆம் தேதி மெல்போன் ஸ்டேடியத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் டி20 உலக கோப்பையில் இதுவரை நடந்த சாதனைகளைப் பற்றி பார்ப்போம்.
அதிக ரன்கள் அடித்தவர் :
இலங்கை அணியின் மகேல ஜெயவர்த்தனே (31 போட்டியில் 1,016 ரன்கள்)
அதிக சிஸ்டர்களை பறக்க விட்டவர் :
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் (33 போட்டியில் 63 சிக்சர்)
அதிக விக்கெட்டுகளை எடுத்தவர் :
வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன் (31 போட்டியில் 41 விக்கெட் )
சிறப்பாக பந்து வீசியவர் :
இலங்கை அணியின் அஜந்தா மென்டிஸ் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 2012 ஆம் ஆண்டு 8 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை எடுத்தார்.
ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் :
கென்யாவுக்கு எதிராக 2007 ஆம் ஆண்டு இலங்கை அணி 260/6 ரன்கள் எடுத்தது.
ஒரு அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் :
இலங்கைக்கு எதிராக 2014 ஆம் ஆண்டு நெதர்லாந்து 39 ரன்களில் சுருண்டது.
அதிக ஆட்டங்களில் பங்கு பெற்றவர் :
இலங்கை அணியின் திலகரத்னே தில்ஷன் (35 போட்டி)
அதிக கேட்ச்களை பிடித்த வீரர் :
தென்னாபிரிக்க அணியின் ஏ பி டி வில்லியர்ஸ் 30 ஆட்டங்களில் 23 கேட்ச்களை பிடித்துள்ளார்.
2007ஆம் ஆண்டிலிருந்து இதுவரையில் நடைபெற்றுள்ள 7 டி20 உலகக்கோப்பை தொடரிலும் பங்கேற்று தற்போது 8ஆவது உலகக்கோப்பை தொடரிலும் பங்கேற்கும் இரு வீரர்கள் :
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஆகிய இருவர் மட்டுமே. மேலும் தற்போதைய உலகக்கோப்பையை தவிர்த்து 7 டி20உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் கிறிஸ் கெய்ல் மற்றும் வெய்ன் பிராவோ ஆடியுள்ளது குறிப்பிடத்தக்கது.