வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மூங்கில் குடி கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை முன்னிட்டு பெருமாளுக்கு பால் தயிர் சந்தனம் பன்னீர் நெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதனை அடுத்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வரதராஜ பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.