புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேளுக்குடி பகுதியில் வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சந்தனம், பன்னீர், இளநீர், தேன், மஞ்சள் பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து சாமியை அருகம்புல் மாலை, வடமாலை மற்றும் வண்ண மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.