சீன அரசு, இலங்கை நாட்டிற்கு 500 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட மருந்துகளை இலவசமாக அனுப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால் அதிக அளவிலான மருத்துவ உதவியை சீனாவிடம் இருந்து பெற்று வருகிறது. கொரோனா பரவிய காலகட்டத்தில் அந்நாட்டிற்கு சோதனை உபகரணங்கள், பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் தடுப்பூசிகளை சீனா அனுப்பியது. அதன் மூலம் கொரோனாவிலிருந்து இலங்கை மீண்டு வர உதவியாக இருந்தது.
அந்த வகையில், சீனா தன் 50 கோடி யுவான் அவசரகால மனிதாபிமான உதவி திட்டத்தின் அடிப்படையில், சுமார் 120 கோடி மதிப்பு கொண்ட மருந்து பொருட்களை இலங்கை நாட்டிற்கு இலவசமாக வழங்கியுள்ளது.
மேலும் வரும் நாட்களில் சீன அனுப்பும், 500 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட மருந்து பொருட்கள் நாடு முழுக்க இருக்கும் மருத்துவமனைகள் மற்றும் நோயாளிகளுக்கு விநியோகம் செய்யப்படும் என்று சீன தூதராக இருக்கும் கி ஷென்கோங் கூறியிருக்கிறார்.