Categories
சினிமா தமிழ் சினிமா

அட! இது வேற லெவல் போங்க…. 111 பசுக்களுக்கு உணவு…. ரசிகர்களால் நெகிழ்ந்து போன பீஸ்ட் நடிகை….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் தற்போது பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே அண்மையில் தளபதி விஜய் உடன் இணைந்து பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், நடிகை பூஜா அண்மையில் தன்னுடைய பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடியிருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியான நிலையில், தற்போது ஒரு புதிய புகைப்படத்தை பூஜா
ஹெக்டே இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

அதாவது நடிகை பூஜாவின் பிறந்தநாளை தெலுங்கு ரசிகர்கள் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அன்னதானம் கொடுத்தும், 111 பசுக்களுக்கு உணவளித்தும் கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படங்களை தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்த நடிகை பூஜா என்னுடைய பிறந்தநாள் அன்று என்னை பெருமைப்படுத்தி விட்டீர்கள் என்று கூறி தன்னுடைய நன்றியை வெளிப்படுத்தி உள்ளார். மேலும் வழக்கமாக முன்னணி நடிகர்களின் பிறந்த நாளை ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடும் நிலையில், நடிகைகளின் பிறந்தநாளை கொண்டாடுவது குறைவு தான். ஆனால் தற்போது நடிகை பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளை ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடியுள்ளது டோலிவுட் வட்டாரத்தில் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Categories

Tech |