ஜெருசலேமில் பாரம்பரியமான சுக்கட் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர்.
ஜெருசலேமில் யூதர்களின் பாரம்பரிய திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. ஜெருசலேம் கோவிலுக்கு எபிரேயர்கள் யாத்திரை செல்ல கட்டளையிடப்பட்ட மூன்று விழாக்களில் கூடாரவிழா என அழைக்கப்படும் சுங்கட் திருவிழாவும் ஒன்றாகும்.
இந்த திருவிழாவில் கலந்து கொள்ள மேற்காப்பிரிக்கா, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து மக்கள் ஜெருசலேமில் குவிந்துள்ளனர். இந்த நிலையில் சுக்கட் திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான யூதர்களும் கிறிஸ்தவர்களும் தெருக்களில் இறங்கி கலை நிகழ்ச்சிகள் நடத்தி உற்சாகமாக வலம் வந்துள்ளனர்.