ஒடிசா மாநிலத்தின் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக், மாநிலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமரத்தப்படும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அனைத்து ஒப்பந்த ஊழியர்களும் முறைப்படுத்தப்படுவார்கள். மாநிலத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரந்தரமாக ரத்து செய்யும் நடைமுறை மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் பல மாநிலங்களில் வழக்கமான முறையில் ஆள் சேர்ப்பு நடைபெறுவதில்லை. ஒப்பந்த முறையில் ஆட்சேர்ப்பு முறையை தொடர்கின்றார்கள்.
ஆனால் ஒடிசாவில் ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் முடிவுக்கு காலம் வந்துவிட்டது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். இதன் மூலமாக 57,000 அதிகமான ஊழியர்கள் பயன்பெறுவார்கள். இந்த முடிவின் மூலமாக ஒப்பந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கு தீபாவளி பரிசு முன் கூட்டி வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.