குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் பவேஷ் பாய் ஆகாரி. இவர் தன்னுடைய 14 வயதான மகளுக்கு பேய் பிடித்திருப்பதாக கூறி பல கொடுமைகளை செய்து கொலை செய்துள்ளார். சிறுமிக்கு பழைய ஆடைகளை உடுத்தி வீட்டுக்குள்ளே யாகம் நடத்தியுள்ளார். பின்பு நாற்காலியில் அமர வைத்து கைகளை இறுக்கி கயிறால் கட்டியும், அசையவிடாமல் உடலில் தீக்காயங்களை ஏற்படுத்தி உள்ளார்.
தந்தையும், அவரது சகோதரரும் சிறுமியை கம்பு, வயர்களால் அடித்து துன்புறுத்தியுள்ளனர். பின்னர், கரும்பு தோட்டத்திற்கு இழுத்து சென்றுள்ளனர். தலைமுடியை முடிச்சு போட்டு, இரண்டு நாற்காலிகளுக்கு நடுவில் அமர வைத்தனர். மூன்று நாட்களாக தண்ணீர், உணவு எதுவும் கொடுக்காமல் வாட்டி வதைத்துள்ளனர். 4 நாள் சித்திரவதை செய்யப்பட்டு சிறுமி அழுகிய நிலையில் உயிரிழந்து கிடந்தார். தந்தையும், அவரது சகோதரரும் யாருக்கும் தெரியாமல் உடலை எரித்துள்ளனர்.