Categories
தேசிய செய்திகள்

அடடே….! அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இத்தனை திட்டமா….? மகிழ்ச்சி செய்தி சொன்ன மாநில அரசு….!!!!

டெல்லி அரசு பள்ளி மாணவர்களுக்காக புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்துவதற்காக திட்டமிட்டிருக்கிறது. அதன்படி அனைத்து பள்ளிகளிலும் உள்ள எஸ்சி, எஸ்டி,ஓபிசி மாணவர்களுக்கு ஆறு உதவித்தொகை திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியான மாணவர்கள் அவர்களின் கல்வி கற்ற ஆகும் செலவை அரசு செலுத்தும். மேலும் இந்த திட்டங்களுக்கு விருப்பம் உள்ள மாணவர்கள் ஆன்லைனில் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும்.

அனைத்து பணிகளையும் தலைமை ஆசிரியர்களுக்கும் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க மாணவர்களை ஊக்குவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு பள்ளி மட்டுமின்றி அரசின் நிதி உதவி திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் உதவி தொகை வழங்கப்படும். இதற்கு மாணவர்கள் அரசு நிர்ணயித்துள்ள மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். இதில் முக்யமந்திரி வித்யார்த்தி பிரதிபா யோஜ்னா என்ற மாநில நிதியுதவி திட்டம், OBC, EBC மற்றும் DNT (Denotified Tribes) மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை திட்டம், OBC, EBCக்கான மெட்ரிக் ஸ்காலர்ஷிப் ஆகியவை அடங்கும்.

Categories

Tech |