சர்தார் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட லைலாவின் புகைப்படம் ட்ரெண்டாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் கார்த்தி நடிப்பில் அண்மையில் விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி தற்போது சர்தார் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை பிஎஸ் மித்ரன் இயக்க, ராசி கண்ணா, ரெஜிஸா விஜயன், லைலா, சங்கி பாண்டே, முரளி ஷர்மா, அவிநாஷ், மாஸ்டர் ரிக்விக் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.
இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைக்க, பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 21-ஆம் தேதி சர்தார் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி, ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, லைலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தார்கள். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற லைலாவின் புகைப்படங்களும் வெளியாகி டிரெண்டாகி வருகின்றது.