Categories
சினிமா தமிழ் சினிமா

“காந்தாரா ஒரு பிரம்மிப்பு”…. புகழ்ந்து தள்ளிய தனுஷ்….!!!!!

நடிகர் தனுஷ் காந்தாரா திரைப்படத்தை புகழ்ந்து ட்விட்டர் பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் திரைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் கன்னட மொழியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் காந்தாரா திரைப்படம் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, இந்த படத்தை அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். என்ன ஒரு பிரமிப்பு. ரிஷப்ஷெட்டி நடிப்பில் அசத்தியிருக்கின்றார். மற்ற கலைஞர்களும் சிறப்பாக நடித்திருக்கின்றார்கள். காந்தாரா ஒரு பிரம்மிப்பு என பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |