சென்னையில் மாணவி சத்யபிரியா கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சத்யாவின் கொலைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சரத்குமாரும் தற்போது சத்யாவின் கொலைக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் சென்னையில் உள்ள பரங்கிமலை ரயில் நிலையத்தில் சதீஷ் என்ற வாலிபர் காதல் தோல்வியால் மாணவி சத்ய பிரியாவை ரயிலின் முன்பு தள்ளி கொலை செய்தார்.
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் தலைநகரில் பட்டப்பகலில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது பொது மக்களிடையே ஒருவிதமான அச்சத்தையும், பாதுகாப்பற்ற சூழ்நிலையையும் உருவாக்கியுள்ளது. விரும்பிய ஒருத்தரை கொலை செய்யும் அளவுக்கு துணிந்து விட்டால் என்றால் அவன் சமுதாயத்தில் வாழும் முறையை கற்றுக் கொள்ளவில்லை என்று தான் கூற வேண்டும்.
தங்களுடைய தனிப்பட்ட வெறுப்பை மற்றவர் மீது காட்டுகிறார்கள். இந்த நிலை மாறுவதற்கு பெற்றோரின் கண்காணிப்பும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலும் தேவைப்படுகிறது. அதோடு உளவியல் மனப் பயிற்சியும் அவசியம் மாகிறது. சதீஷின் கொடூரமான செயலால் மாணவியின் தந்தை மாணிக்கம் விஷம் குடித்து உயிரிழந்தது மிகவும் வேதனை அளிக்கிறது. கணவன் மற்றும் மகளை இழந்து நிற்பதியாக நிற்கும் சத்யாவின் தாயார் மற்றும் தங்கைகளுக்கு யார் ஆறுதல் கூறுவார் என்று தெரியவில்லை.
சதீஷ்க்கு தக்க தண்டனை வழங்குவது மட்டும் தான் அவர்களுக்கு வழங்கும் சரியான ஆறுதலாக இருக்கும். இனி ஒரு உயிரை கொல்ல வேண்டும் என்றால் மற்றவர்கள் பயப்படும் அளவுக்கு சதீசுக்கு தண்டனை கடுமையானதாக இருக்க வேண்டும். மேலும் ரயில்வே நிலையத்தில் நடைபெறும் அசம்பாவித சம்பவங்களை தடுப்பதற்கு கூடுதல் பாதுகாப்பு பணிகளில் அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.